JobVibe.lk - Sri Lanka Job Portal

மு.கா. பிரதிப் பொருளாளர் யஹியாகானின் பெருநாள் வாழ்த்து

(அஸ்லம் எஸ்.மௌலானா)

நாட்டின் பொருளாதார நெருக்கடி நீங்கி, சகல சமூகங்களும் சுபீட்சமாக வாழ இப்புனித பெருநாள் தினத்தில் பிரார்த்திப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் புனித நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;


30 நாட்கள் நோன்பு நோற்று அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுக் கொண்ட நாம், அதே பாதையில் எமது எதிர்கால வாழ்க்கை முறையையும் நிலை நிறுத்திக்கொள்ள பிரார்த்திப்போம்.


கடந்த நோன்பு பெருநாள் எம்மை வீட்டோடு அமரச் செய்து விட்டது. கொரோனா கொடூரம் அன்று போல் இன்றும் எம்மை வதைக்கின்ற இக்காலத்தில் முழு உலக மக்களையும் பாதுகாக்கவும் அக் கொடிய நோயிலிருந்து உலகம் மீண்டெழவும் பிரார்த்திப்போம்.


இலங்கை இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. இந்த நெருக்கடி நீங்கி முழு மக்களும் சுபீட்சம் பெறவும் இன்றைய பெருநாள் தொழுகையில் இறைவனிடம் இரு கரம் ஏந்துவோம்.


புனித நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எனது இனிய பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்- என்று தெரிவித்துள்ளார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال