JobVibe.lk - Sri Lanka Job Portal

கடையாமோட்டை தேசிய பாடசாலையில் 9A சித்திபெற்ற மாணவி ஏ.கே.அஸ்ரா கௌரவிப்பு!

2020 ஆண்டு நடைபெற்ற க.பொ.த.  சா/த பெறுபேறுகளின் படி கடையாமோட்டை தேசிய பாடசாலையில் சகல பாடங்களிலும் 9A சித்திபெற்ற மாணவி ஏ.கே. அஸ்ரா என்ற மாணவியை கௌரவிக்குமுகமாக சமூக சேவையாளர் எம்.ஐ. சம்சுதீன் அவர்களின் முயற்சியினால் கனணி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் அதிபர் என்.எம்.எம்.நஜீப், கடையாமோட்டை தேசிய பாடசாலையின் ஆசிரியர்களான ஏ.எச்.பௌசுல், எம். இர்பான், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் காதர், நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் எஸ்.ஏ. ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இக்கனணிக்கான நிதி நல்லுள்ளம் படைத்தவர்களின் மூலம் நிதி சேகரிக்கப்பட்டு பெறப்பட்டதாக சமூக சேவையாளர்  எம்.ஐ.சம்சுதீன் தெரிவித்தார் .


எம்.ஐ. சம்சுதீன் புத்தளம் - அக்கரைப்பற்று பிராந்தியத்தில் பல சேவைகளை செய்து வரும் சமூக சேவையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال