JobVibe.lk - Sri Lanka Job Portal

SJB, UNP, NPP தேசியப்பட்டியல் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று!

இம்முறை பொதுத் தேர்தலில் தேசிய பட்டியல் ஆசனங்களை பெற்றுக்கொண்ட சில கட்சிகள் அது தொடர்பில் முடிவு எடுப்பதற்காக இன்று ஒன்றுகூடவுள்ளனர்.


பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 17 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 ஆசனங்களும், தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, அபே ஜனபல கட்சி, இலங்கை தமிழரசு கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்பவற்றிற்கு தலா ஒரு ஆசனமும் வழங்கப்பட்டிருந்தது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அபே ஜனபல கட்சி மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகிய தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளனர்.

அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தொடர்பில் இன்று இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் தொடர்பிலும் இன்று தீர்மானம் எடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال