JobVibe.lk - Sri Lanka Job Portal

மக்களின் இதயங்களில் வாழ்பவர்களுக்கு... சோதனைகள் ஒருபோதும் தடையல்ல..!

மண்ணையும் மக்களையும் நேசித்து, ஊரின் விடிவுக்காக உழைப்பதே ஒரு தலைவனின் உயிர்மூச்சு. அப்படிப்பட்டப் பயணத்தில் குறுக்கிடும் புயல்களும், சோதனைகளும் புதியவை அல்ல.

இன்று பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி  ஹிஸ்புல்லாஹ் அவர்கள், நாட்டின் சட்டத்தையும் நீதியையும் மதிக்கும் ஒரு பொறுப்புள்ள பிரதிநிதியாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணையைச் சந்தித்து தனது ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்.

கட்டுக்கதைகளும் சந்தேகப் பார்வைகளும் தற்காலிகமாகப் பரப்பப்படலாம். ஆனால், நமது பிராந்தியத்தின் கல்வி வளம், பொருளாதார முன்னேற்றம், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் என ஒவ்வொரு கல்லிலும் எழுதப்பட்டிருப்பது அவரது உழைப்பின் அடையாளம்.

"தூய்மையான மனசாட்சியை விடப் பெரிய தைரியம் வேறு எதுவும் இல்லை."

நெருப்பில் புடமிடப்பட்ட தங்கம்தான் அதிக பிரகாசத்தோடு வெளிவரும். இந்தச் சோதனைக் காலமும் கடந்து, உண்மையும் தூய்மையும் வெளியாகும் போது, மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கை இன்னும் ஆழமாகும்.

மக்களுக்காகச் சிந்திய ஒவ்வொரு துளி வேர்வைக்கும், ஆற்றிய தியாகங்களுக்கும் என்றும் வீண்போகாது. சத்தியமும் நீதியும் நிச்சயம் வெல்லும்.

மக்களின் அன்பும் பிரார்த்தனைகளும் என்றென்றும் உங்களுடன்.

(எஸ். சினீஸ் கான்)




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال